வட இந்திய தமிழ் பரப்பு கழகம்.

இந்தியாவின் விடுதலைக்கு முன்பு இந்தியை தாய்மொழியாக கொள்ளாத குஜராத் மாநிலத்தை சேர்ந்த மகாத்மா காந்தி இந்தியர்கள் அனைவரும் இந்தி கற்க வேண்டும் என்றார். தற்போது குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிரதமர் திரு நரேந்திர மோடி  அறிவிக்கும் திட்டங்கள் இந்தி மொழியிலேயே கூறப்படுகின்றன. இதைபோன்றே தமிழைத் தாய்மொழியாக கொள்ளாத உத்திரகண்த் மாநிலத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு தருண் விஜய் தமிழின் அருமைப் பெருமைகளைப் பற்றி பேசி வருகிறார். மேலும் பல மாற்று மொழி தலைவர்கள் தமிழின் சிறப்பை அறியும் வகையில், வட இந்திய தமிழ் பரப்பு கழகம் ஆரம்பிக்கப்பட வேண்டும்,

Advertisements
Posted in Uncategorized | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அந்தத் தலைவர்

அந்த தலைவருக்கு விளம்பரம் பிடிக்காது. தன்னுடைய புகைப்படம், நாளிதழ்கள், மற்ற இதழ்கள், தொலைக்காட்சிகள்,விளம்பரப்பலகைகள்(cut outs) இவை எதிலும் வரக்கூடாது  என்பதில் கண்டிப்பாக இருக்கிறார்,

எதையும் தானே செய்து, செய்தித்தாளில் தன் பெயர் வர செய்வதை விரும்பாதவர். தனக்கு எந்த பொறுப்பையும் ஒதிக்கிக்கொள்ளாமல், எல்லா பொறுப்புகளையும் மற்ற தலைவர்களுக்கு(அமைச்சர்களுக்கு) அளித்து விட்டு.அவர்கள் சரியாக பணி புரிய ஆலோசனைகள் தருவதிலும்.அவர்கள் எந்த தவறும் செய்யாதவாறு கண்காணிப்பதிலும் கவனம் செலுத்துவார். எந்த ஒரு செய்தியும் தன் பெயரில்வருவதை விரும்பாதவர்,

தனக்கென்று குடும்பம் இருந்தாலும்(அதிலிருந்து சற்று விலகி துறவி போல் இருப்பவர்), இல்லற பொறுப்புகளையும், கடமைகளையும்  பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு. துணைவருடன் தனது ஓய்வூதியத்தில் வாழ்பவர்.

அவருக்கு விடுமுறை நாள் என்பதோ, அலுவலக நேரத்திற்கு அப்பாற்பட்ட நேரம் என்பதோ இல்லை.வாரத்தில் ஏழு நாட்களிலும் வேலை, .ஓய்வு/ உறக்கம் பெறும் நேரம் தவிர்த்து எல்லா நேரமும் அலுவலக நேரம்..

தன்னுடைய பதவி காலத்திலேயே அல்லது. வாழ்நாளில் நல்லன சிலவற்றையாவது செய்தாகவேண்டும் அல்லது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம்/வெறி இல்லாதவர். அரசு/சமுதாயம் சிறப்பாக செயல்பட,, சமுதாயம் உயர்ந்த, ஏழ்மையற்ற, செல்வமிகுந்த, ஒழுக்கமிக்க,உழைப்பில் ஆர்வமுடைய,தன்மான உள்ள சமுதாயமாக மாற வழி வகைகளை, கொள்கைகளை அமைப்பதும், அவற்றை நிறைவேற்ற  ஆர்வமும் திறமையும் மிக்க தலைவர்களை உருவாக்குவதும் தனது நோக்கமாக கொண்டவர்.

அவருக்கு விழாக்களுக்கு செல்லவோ அல்லது அவைகளில் பேசவோ,திரைப் படங்கள், நாடகங்கள் இசை நிகழ்ச்சிகள் இவற்றை காணவோ, இவற்றில் கலந்துக் கொள்ளவோ நேரம் இல்லை. அவ்வப்போது, மற்ற தலைவர்கள், சாதாரணக் குடிமக்கள், பல தரப்பட்ட துறைகளை சார்ந்தவர்கள் ஆகியோரிடம் கலந்து உரையாட நேரம் ஒதுக்குவார்.

மாத்த்தில் சில நாட்களாவது பயணம் செய்து உள்ள நிலையை, அறிந்து, அது மேலும் உயர வழிவகைகளை காண விரும்புவர்.

 

 

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

வேலை வாய்ப்புகள்.

 

தமிழ்நாட்டில் ஒரு புரத்தில் நிறைய பேர் குறிப்பாக படித்தவர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். மறுபுரத்தில் நிறைய வேலைகளுக்கு ஆள் இன்றி தொழில்கள் பாதிக்கப்படுகின்றன. கிராமங்களில் மின்னியல் வல்லுனர்கள்(ELECTRICIANS), குழாய் வல்லுனர்கள்(PLUMBERS,  இயந்திர வல்லுனர்கள்(MECHANICS) வாகன வல்லுனர்கள்(AUTO MECHANICS), வாகன ஓட்டுனர்கள்(VEHICLE DRIVERS), பட்டறை வல்லுனர்கள்(WELDERS), போன்ற வல்லுனர்கள் தேவைக்கு குறைவாக உள்ளனர், ஆனால், பொறியாளர்கள் (Engineers), ஆசிரியர்கள்(TEACHERS),கலை மற்றும் அறிவியல் பட்ட்தாரிகள்(ARTS AND SCIENCE GRADUATES) ஆகியோரில் வேலையின்மை மிக அதிகமாக உள்ளது. இப்பொழுது அரசு செய்யவேண்டியது, வேலை வாய்ப்பு அலுவலகங்கள் வேலையற்றவர்களுக்கு, வேலை வாய்ப்புள்ளதொழில்களில் இலவசமாக 3-6 மாத பயிற்சி அளித்து வேலையில் அமர்த்த வேண்டும் அல்லது, சுய தொழில் செய்ய இடங்கள், வங்கி கடன்கள் முதலியன ஏற்பாடு செய்ய வேண்டும். இப்பணியில், தொழிற்சாலைகள்,வியாபார நிறுவனங்கள் ஆயவற்றுடன் ஒத்துழைக்க வேண்டும்.

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ் நாடு சட்டசபை தேர்தல்- தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை:

1. எல்லோர்க்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். வேலைக்கு தேவையான பயிற்சியை அரசு இலவசமாக அளிக்கும்

2. தேவையானால் தக்காளியை கிலோ ரூ.10/- க்கு  கொள்முதல் செய்யப்படும். இதன் அடிப்படையில் மற்ற காய்கறிகளுக்கும், தானியங்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்ப்டும்.

3.நிர்வாகத்தில், விதிகள் மற்றும் நடைமுறைகளை மாற்றி, ஊழலை முற்றிலுமாக ஒழிப்போம். உதாரணத்திற்கு:.விண்ணப்பதாரர்கள் அனுமதி அளிக்கும் அலுவலகத்திற்கு மட்டும் விண்ணப்பிக்கலாம், அந்த அலுவலகம்,தேவைப்பட்டால் தடையின்மை சான்றுகளை மற்ற அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளும். தேவையில்லாத தகவல்கள் கேட்கபடமாட்டாது.தகவல் தொடர்பு பரிமற்றங்கள் தபால் அல்லது மின்-அஞ்சல் மூலம் இருக்கும். விண்ணப்பதாரர்கள் அதிகாரிகளை சந்திக்க வேண்டிய கட்டாயம் இருக்காது. எனவே ஊழலுக்கு வாய்ப்பு இருக்காது.

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ப்ரஹீய்(Brahui) மொழி

திராவிட மொழிகளை தென் திராவிட மொழிகள் (தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துலு) வட திராவிட மொழிகள்(குருக், போண்ட்,பிள், ப்ரஹுய்..) என்று இரு வகையாக பிரிக்கலாம். வட திராவிட மொழிகள் பலவற்றிற்கு எழுத்து வடிவம் இல்லை. பள்ளிகளிலும் கற்பிக்கப்படுவதில்லை.இவற்றுள் ப்ரஹுய் மொழி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இரான், போன்ற நாடுகளில் சிலருக்கு தாய் மொழியாக உள்ளது. பாகிஸ்தானிலுள்ள பலோசிஸ்தான் மாநில அரசு, ப்ராஹுய் மொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, தொடக்கப் பள்ளியில் அம்மொழியை கற்பிக்க முடிவு செய்து, நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேப்போல், இந்தியாவில், ஜர்கன்ந், சட்டிஸ்கார், மத்ய ப்ரதேசம்,ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில், குருக், போண்த் போன்ற மொழிகளை, அம்மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு, தொடக்கப் பள்ளியில் கற்பிக்க ஆவண செய்தல் வேண்டும்.

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

Inflation and economic Development

It is important to create demand for goods and services before the products are made in India and services sector is established. How do we create demand? By putting money into the hands of as many people as possible. If we take various sectors of the economy, agriculture sector is the one where more than 50% (nearly 65%) of the people are engaged. If those in the agricultural sector are to have surplus money to purchase additionally produced goods and services, the prices for the agricultural products should be increased for farmers and the wages of agricultural labourers should be increased. This will mean:

  1. When prices of onions, tomatoes, rice, wheat etc go up, there should be no agitations against the price rise
  2. There should be no ban on exports of these items
  • There should be no permission for imports of these items
  1. There should appropriate storage facilities  to store surplus production and there is no distress selling
  2. Farmers should be employed full time i.e. at least for 8 hours a day. This will require farmers to take up allied work like dairy farming, poultry farming, goat and sheep rearing, honey  making, rope  making etc. or intensive farming like multiple crops, good irrigation, etc.

People not engaged in agricultural sector will suffer with increased prices. To remove their sufferings their wages should also be increased. Their wages otherwise  also will go up with large scale demand from farmers and farm workers for the manufactured goods leading to higher profits for factories which in turn will lead to higher wages.

Posted in Uncategorized | Tagged , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பூமிக்கடியில் நீர் தேக்கங்கள்

மேட்டூர் அணை நிரம்பியாதால், தேவையில்லாமலும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்நீர் பயன்படுத்தப்படாமலே கடலில் கலக்கிறது, ஆங்காங்கே ஏரிகள் கட்டி இந்நீரை தேக்கி வைக்க வேண்டும். ஏரிகள் கட்ட வசதியாக இடங்கள் இல்லை எனில், பூமிக் கடியில் ஏரிகள் அமைத்து சேமித்து வைக்கலாம்.(underground storage dams). 200x200x10 அளவில் ஒரு அணை 4 லட்சம் கன அடி நீரை ஒவ்வொரு அணையிலும் சேமிக்கலாம். இப்படி ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு அணை வீதம் 500 அணைகள் கட்டினால் 2000 லட்சம் கன அடி நீரை சேமிக்கலாம். இந்நீர் நிலத்தடி நீரை அதிகரிக்கும். கோடை காலத்தில் சில லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி கிடைக்கும்.

Posted in Uncategorized | Tagged , , , , | பின்னூட்டமொன்றை இடுக